அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தலைச் சமாளிக்க வாக்காளர்கள் தனக்கு வலுவான ஆணையை வழங்க வேண்டும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ட்ரம்பின் வரிகளும், இணைப்பு பற்றிய பேச்சும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், கனடா அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைத்து அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் கனேடிய பிரதமர் கூறியுள்ளார்.

கனேடிய பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும்
ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக நடந்த கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கும் கார்னி கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிபரல் தலைவராக போட்டியிடுவதற்கு முன்பு எந்த அரசியல் அனுபவமும் இல்லாத 60 வயதான முன்னாள் மத்திய வங்கியாளர் ஆவார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் கனடாவில் சுமார் 130 பில்லியன் டொலர் கூடுதல் செலவினங்களை உறுதியளிக்கும் லிபரல் தளம், 2025/26 பற்றாக்குறை கனடாவில் 62.3 பில்லியன் டொலர்களாக இருக்கும் என்று கணித்துள்ளது.
இது கடந்த டிசம்பரில் கணிக்கப்பட்ட 42.2 பில்லியன் டொலர்களை விட மிக அதிகம்.
ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக திங்களன்று வெளியிடப்பட்ட மூன்று நாள் நானோஸ் கருத்துக்கணிப்பு, லிபரல்களுக்கு 43.7 சதவீத மக்கள் ஆதரவும், கன்சர்வேடிவ்களுக்கு 36.3 சதவீத மக்கள் ஆதரவும் இருப்பதாகக் தெரிவிக்கின்றது.
Social Plugin
Social Plugin