தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில், தியாகதீபம் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பணிக்குழு உறுப்பினர்கள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், மாவட்டக் கிளைப் பணிமனையில் இன்றையதினம் (19) அன்னைபூபதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் வட்டாரக்கிளைத் தலைவி குணலக்சுமி குலவீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அருள்செல்வி கனகராசா நினைவுச்சுடரினை ஏற்றிவைத்தார்.
அகவணக்கம், மலர்மாலை அணிவித்தல், மலரஞ்சலி என்பவற்றைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், போராளிகள் நலன்புரிச்சங்க உறுப்பினர் செல்வரட்ணம் தனுபன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
Post a Comment