Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

டிரம்ப் கை வைத்த 'ராஸ் இசா' துறைமுகம் உலக வரைபடத்தில் எவ்வளவு முக்கியமான இடம்!!

ஏமன் நாட்டில் உள்ள ராஸ் இசா துறைமுகம் உலக வரைபடத்தில் மிக முக்கியமான இடம் ஆகும். ஆப்பிரிக்கா,ஆசியா, ஐரோப்பா உள்ள கண்டங்களை இணைக்கும் செங்கடல் பகுதியில் தான் ஏமன் நாடு அமைந்துள்ளது. இதன் காரணமாக ஏமன் கப்பல் போக்குவரத்து மற்றும் கடல் வழி வர்த்தகத்திற்கு ஏற்ற இடமாக உள்ளது. தெற்கே ஏடன் வளைகுடாவாலும் மேற்கே செங்கடலாலும் சூழப்பட்டுள்ளது. ஏமன் அருகில் உள்ள செங்கடல் வழியாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட முக்கியமான இடத்தில் தான் டிரம்ப் கை வைத்துள்ளார்.

ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள கார்டாஃபுய் கால்வாய் ஏமன் நாட்டிற்கு பக்கத்தில் செல்கிறது. இந்த கால்வாய் தான் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான கடல் வர்த்தகப் பாதை ஆகும். ஏமனின் அண்டை நாடுகளாக வடக்கே சவுதி அரேபியாவும் கிழக்கே ஓமனும் இருக்கிறது. ஏமனில் கார்டாஃபுய் கால்வாயைச் சுற்றி ஏராளமான தீவுகள் இருக்கின்றன.

செங்கடல் மற்றும் பாப் எல் மண்டேப்பின் கிழக்கே அமைந்துள்ள ஏடன் என்ற நகரத்தில் தான் ஏமனின் மிகப்பெரிய துறைமுகம் அமைந்துள்ளது. இந்த இடகம் உலகின் பரபரப்பான நீர்வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சிறந்த இயற்கை துறைமுகம் ஆகும்.

இந்த துறைமுகத்திற்கு அடுத்ததாக உள்ள மிக முக்கியமான இடம் என்றால் ராஸ் இசா துறைமுகம் தான். ஏனெனில் ஏடனின் முதன்மை எண்ணெய் முனையமாக ராஸ் இசா துறைமுகம் திகழ்கிறது. ஏமனில் உள்ள ஒரு முக்கிய துறைமுகமாகும். ராஸ் இசா முனையத்திற்கும் மாரிபில் உள்ள எண்ணெய் வயல்களுக்கும் இடையில் மாரிப்-ராஸ் இசா என்ற மிகப்பெரிய எண்ணெய் குழாய் பாதை உள்ளது. ராஸ் இசா ஒரு ஆழ்கடல் துறைமுகமாக இருக்கிறது.

செங்கடல் கடற்கரையில் பெரிய அளவிலான எண்ணெய் நடவடிக்கைகளுக்கு இது ஏற்ற இடமாக இருக்கிறது. இங்கும் மிதக்கும் எண்ணெய் சூப்பர் டேங்கர் பிரதான துறைமுக வளாகத்திலிருந்து நிறுத்தப்படுவது வழக்கம். இது 351 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 405,000 டன் கொள்ளளவு கொண்டதாகும். துறைமுகத்தில் கடல் ஆழம் 35 மீட்டர் என்பதால், பெரிய சூப்பர் டேங்கர்கள் கூடுதல் பரிமாற்ற உபகரணங்கள் தேவையில்லாமல் கப்பல்களால் சரக்குகளை நிறுத்தி வெளியேற்ற முடியும். இதனால் ஏமனில் மிகவும் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது.இதைத்தான் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இது ஒருபுறம் எனில் ஹமாஸ்க்கு ஆதரவாக ஹவுத்திகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தார்கள். கடந்த நவம்பர் 2023 முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை சில கப்பல்களை மூழ்கடித்துள்ளனர். இதில் நான்கு மாலுமிகளைக் கொன்றனர். அமெரிக்கா ஐரோப்பாவிற்கு ஆசியாவை இணைக்க செங்கடல் வழித்தடம் என்பதால் ஹவுத்திகள் செயல்கள் வர்த்தகத்தை வெகுவாக பாதித்துள்ளது.

பொதுவாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் அதன் வழியாக சென்று வந்தன. ஹவுத்திகள் அமெரிக்க போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவது அந்நாட்டிற்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. இந்த சூழலில் தான் டிரம்ப் ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார். வான்வெளி தாக்குதலில் ராஸ் இசா துறைமுகத்தில் 74 பேர் இறந்துள்ளனர். பல 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big