Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      அறிகுறிகள் தெரிந்தால் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்: சுகாதார அமைச்சகம் வெளியிட்ட எச்சரிக்கை..

      பல்வேறு சமூக ஊடகங்களில் உலா வரும் போலி பரிந்துரைகள், குறிப்பாக கோவிட்-19 சிகிச்சைகள் மற்றும் குணப்படுத்துதல் குறித்து பகிரப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று குடியிருப்பாளர்களை அமீரக சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.



      கோவிட்-19 அறிகுறிகள் உள்ளவர்களுக்கு செய்யப்படுவதாக கூறப்படும் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது குறித்து, சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் சரியானவை இல்லை என்று சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MOHAP) மறுப்பு தெரிவித்துள்ளது.

      இதில் அரசாங்க சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளாமல், தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் பல்வேறு வைட்டமின்களை எடுத்துக்கொள்வதும் அடங்கும். கோவிட்-19 அறிகுறிகள் தென்படுவோர் வதந்தி செய்திகளை நம்பி சுயமாக செயல்படாமல், சுகாதார அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகள் குறித்து தெரிவிப்பதே சரியான முறை. இவ்வாறு செய்து வதந்திகளை புறக்கணிக்குமாறு சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

      மேலும் தங்களது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் இருந்து துல்லிய தகவல்களை பெற்று கொள்ளுமாறும் MOHAP அறிவுறுத்தியுள்ளது.

      Tags

      Post a Comment

      0 Comments