நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் 3ஆம் அலை ஆரம்பம்- சுகாதார அமைச்சு!

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இலங்கை மூன்றாம் நிலையிலுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் கொத்தணியோடு அண்மையில் இருந்தவர்களின் மூலமாகவே மற்றைய கொத்தணி உருவாகப்பட்டுள்ளது என அமைச்சின் சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இரண்டு வருடங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தோடு வாழவேண்டிய சூழல் நிலவுவதாகச் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜயறுவன் பண்டார தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டின் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர்  இதனைக் குறிப்பிட்டார்.


Post a Comment

Previous Post Next Post