அமெரிக்கா செல்லும் கனடியர்களுக்கு புதிய கட்டுப்பாடாக புகைப்படம் எடுக்கும் திட்டம் அறிமுகம்!
அண்மையில், ரொரன்ரோவைச் சேர்ந்த பிரபல மனநல நிபுணர் வாரன் ஷெபெல், அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது, எல்லையில் அமெரிக்க அதிகாரிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
விமானம், கடல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து மூலம் அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து கனேடியர்களின் முகங்களும் பதிவுசெய்யப்படவுள்ளன. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம், ஏற்கனவே பயணிகளின் முகத்தை அவர்களின் பயணச்சீட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றது.
இந்தத் திட்டம் எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதற்கட்டமாக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இது அறிமுகப்படுத்தப்படும்.
அமெரிக்கப் பிரஜைகள் அல்லாத, கனடியர்கள் உட்பட ஏனைய அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளின் முகப்படங்களும் பதிவு செய்யப்படும். சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்கும், பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், இந்த நடவடிக்கை மக்களின் தனிப்பட்ட தனியுரிமையை பாதிக்கக்கூடும் எனப் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments