Type Here to Get Search Results !

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - நள்ளிரவில் இடம்பெற்ற அராஜகம்!

முள்ளிவாய்க்கால் மண்ணில் கடந்த 2009 ஆம் ஆண்டு உயிரிழந்த உறவுகள் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 12 முதல் 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்ரிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் “பொது நினைவுக்கல்” ஒன்றினை நடுகை செய்வதற்கான முயற்சிகள் நேற்று(12) புதன் கிழமை மாலையில் முன்னெடுக்கப்பட்ட்து

பொது நினைவுக்கல் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொருக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

(நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ள கல்)

படையினரின் பூரண கட்டுப்பாட்டில் பிரதேசம் இருந்தவேளை குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (12)மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது . 

இந்த நிலையில் பொலிஸ், இராணுவம், புலனாய்வாளர்கள் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததோடு நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது என தடையை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்ட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததோடு முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் இராணுவ தடை ஏற்படுத்தப்பட்டு உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததோடு பொது நினைவுத்தூபியும் அடித்து உடைத்தெறியபட்டுள்ளது .

நினைவுக்கல் இருந்த இடம் தெரியாது அகற்றிச் செல்லப்பட்டுள்ளதோடு பொது நினைவுத்தூபியும் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையை கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களை கொண்டு அகற்றி செல்லப்பட்டுள்ளது.

இரவிரவாக அப்பகுதி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவ வாகனங்கள் சுற்றி திரிந்ததாகவும் அயலில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.

 உடைக்க பட்டுள்ள நினைவு தூபியை சூழ இராணுவ காலணி அடையாளங்களை ஒத்த அடையாளங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு :

உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை !

முள்ளிவாய்க்கால் நினைவு  தூபி அமைந்துள்ள நினைவு முற்றத்தின் நான்கு பகுதிகளிலும் இராணுவம் நிறுத்தப்பட்டு அப்பகுதிக்குள் நுழைய இராணுவத்தால் தடை விதிக்கபட்டுள்ளது .

பிரதான வீதியிலிருந்து நினைவு முற்றத்துக்கு செல்லும் வீதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டு உள்ளே எவரும் செல்லமுடியாது தடை ஏற்படுத்த பட்டுள்ளதோடு முள்ளிவாய்க்கால் கிராமத்துக்கு செல்வோர் வேறு பாதைகளால் செல்லுமாறு இராணுவத்தால் பணிக்கபடுகின்றார்கள்.

நேற்று மாலை நினைவேந்தல் பொது கட்டமைப்பினரால் பொது நினைவுக்கல் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிக்கு உடனடியாக இராணுவம் ,பொலிஸார் வருகை தந்து விசாரணைகளில் ஈடுபட்டதை தொடர்ந்து இராணுவம் அப்பகுதிக்குள் நுழைய தடை விதித்துள்ளனர். 

அப்பகுதிக்குள் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இராணுவத்தால் மறுக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

Cine Mini

8/sgrid/CineMini
pe_63279890_773782650
pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650