சர்வதேச செவிலியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று செவிலியர்களை க honor ரவிக்கும் ஒரு நாளாகும். சர்வதேச செவிலியர் கவுன்சில் (ஐ.சி.என்) 1965 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்த நாளைக் கொண்டாடியது. ... 1974 ஆம் ஆண்டில், நவீன நர்சிங்கின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் என்பதால் 1974 ஆம் ஆண்டு மே 12 ஐ கொண்டாட தேர்வு செய்யப்பட்டது.
இந்தியாவில் சர்வதேச செவிலியர் தின விழாவில் வைத்தியசாலையின் தலைமை அதிகாரி ரவிச்சந்திரன் தாதியர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அந்தவகையில், கோவையிலுள்ள வைத்தியசாலையில் சர்வதேச செவிலியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியசாலையின் தலைமை அதிகாரி ரவிச்சந்திரன் பெருந்தொற்றை கருத்தில் கொள்ளாமல் நோயாளிகளுக்கு உதவும் தாதியர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என புகழாரம் சூட்டியுள்ளார்.
அப்போது உணர்ச்சிவசப்பட்ட வைத்தியசாலையின் தலைமை அதிகாரி ரவிச்சந்திரன், கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் தாதியர்களின் கால்களில் விழுந்து நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள் என கூறி கண்ணீர் விட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 25,000 மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வைத்தியசாலையில் வைத்தியர்களும் மற்றும் தாதியர்களும் தங்கள் உயிரை பனையம் வைத்து தங்கள் கடமைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Social Plugin
Social Plugin