Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      பிரபல திரைப்பட பாடலாசிரியராக அறியப்பட்ட தமிழ் தேசிய ஆதரவாளரான கவிஞர் புலமைப்பித்தன் மறைந்துள்ளார்!

      தமிழ் தேசிய ஆதரவாளரான கவிஞர் புலமைப்பித்தன் மறைந்துள்ளார்.

      புலமைப்பித்தனின் வீடு எங்களது இரண்டாவது தாயகம்' என்று தேசியத் தலைவர் பெருமையுடன் குறிப்பிடும் வகையில் ஈழப் போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்தவரும், எம்ஜிஆர் புலிகளுடன் நெருக்கமாகக் காரணமானவருமான தமிழீழப் பற்றாளர் கவிஞர் புலமைப்பித்தன் இன்று(08) மறைந்துள்ளார்.


      தமிழகத்தில் பிரபல திரைப்பட பாடலாசிரியராக அறியப்பட்டவர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர் நடித்த பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை நான்கு முறை பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர் உடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்ததால் அதிமுக உருவான போது, அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக புலமைப்பித்தன் அங்கம் வகித்தார்.

      தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் புலமைப்பித்தனின் வீட்டில் தங்கி பல்வேறு பணிகளை செய்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

      தமிழக அரசியல் இதழில் "தலைவர் தம்பி நான்"என்ற தலைப்பில் எம்ஜிஆர் பிரபாகரன் ஆகியோருடன் தனது தனிப்பட்ட அனுபவங்களையும் தன்னுடைய அரசியல் பயணத்தில் இவ்விரு ஆளுமைகளை கடந்துவந்த வரலாற்றுத் தருணங்களையும் இணைத்து புலவர் புலமைப்பித்தன் ஒரு பெருந்தொடர் வடித்தார்.



      புலமைபித்தன் உறுதி

      1964-ல் தொடங்கிய புலமைப்பித்தனின் திரைப்பயணம் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த எலி திரைப்படம் வரை இடைவிடாமல் தொடர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற கருத்தில் உறுதியானவராகவும் இருந்தார். கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் புலமைப்பித்தன். அண்மையில் மருத்துவமனையில் புலமைப்பித்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா. இன்று காலை சிகிச்சை பலனின்றி புலமைப்பித்தன் காலமானார். அவரது உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அதிமுகவின் முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர். சரஸ்வதி, திருமுருகன் காந்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

      அதிமுக

      அதிமுக

      முன்னதாக புலமைப்பித்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை - அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலை கேள்விப்பட்டு நேற்று நேரில் சென்று சசிகலா, புலமைப்பித்தனிடம் நலம் விசாரித்தார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இதயக்கனி திரைப்படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லா இருக்கணும் என்ற பாடலின் மூலம், அதிமுகவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல தோள் கொடுத்தவர் புலமைப்பித்தன் என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.

      தமிழக அரசின் விருது

      அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர் புலமைப்பித்தன். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களான பிரபாகரன், பேபி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் புலமைப்பித்தன் வீட்டில் தங்கி தங்களது பணிகளை செய்ததும் வரலாறு. புலமைப்பித்தனின் வீடு தங்களது இரண்டாவது தாயகம் என்றுதான் அந்நாளில் புலிகளின் தலைவர்கள் கூறியதை அவரே பல பேட்டிகளில் பதிவும் செய்திருக்கிறார்.

      Post a Comment

      0 Comments

      Click To Here On Every Day For Development

      Phots Shot

      8/Photography/grid-big