கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) ஆளும் லிபரல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்திருக்கிறது.
அது அக்கட்சிக்கு மாபெரும் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
கார்னி தலைமையிலான லிபரல் கட்சிக்கு வெற்றியை கனேடியத் தேர்தலில் மீண்டும் ஆளும் கட்சியான லிபெரல் கட்சி வெற்றி!டியர்கள் 4வது முறையாக வழங்குகிறார்கள்.

அமெரிக்க அதிபர் கனடாவுக்குப் புதிய வரிகளை விதித்திருந்தார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் கனடிய மக்கள் எதிர்த்தரப்பு கன்சர்வேட்டிவ் (Conservative) கட்சியை விட ஆளும் மிதவாதக் கட்சிக்கு(Liberal) ஆதரவளித்திருப்பதாகத் தெரிகிறது.
காலை 5:55(Apr-29) மணி EDT நிலவரப்படி, லிபரல்கள் 343 தேர்தல்களில் 168 இடங்களில் வெற்றி பெற்றனர் அல்லது முன்னிலை வகித்தனர். Pierre Poilievre இன் கன்சர்வேடிவ்கள் இதுவரை 144 ரைடிங்களுடன், எதிர்க்கட்சியாகத் தொடர உள்ளனர்.
பெரும்பான்மையை உருவாக்க கட்சிகளுக்கு 172 இடங்கள் தேவை.
தோல்வியை ஒப்புக்கொண்ட எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவ் (Pierre Poilievre) திரு கார்னிக்கு வாழ்த்துக் கூறினார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரியைச் சமாளிக்க கனடியர்கள் ஒன்றாய் இணைந்து செயல்பட வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் இருவரும் தேர்தல் முடிவுகளின் பின் ஊடக சந்திப்பின் பின் கேட்டுக்கொண்டனர்.
2025 Federal Election Results

Social Plugin
Social Plugin