படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் திராகி சிவராமின் 20ஆம் நினைவேந்தல்!!

யாழ்ப்பாணம் ஊடக அமையம், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் - பிரதான வீதியில் அமைந்துள்ள, படுகொலை செய்யப்பட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியில் தராகி சிவராமின் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும், இதே தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் ஆகியோரின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூறப்பட்டது.

மேலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஊடகவியலாளர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஊடகவியாளர்கள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்றைய நினைவேந்தல் போது பொலிஸார் மற்றும் புலனாய்ப்பிரிவினரின் கடும் அச்சுறுத்தல் காணப்பட்டமை குறிப்பிடதக்கது.

Source: JaffnaZone(Web)

Post a Comment

Previous Post Next Post