ஈழப் பெண்களும் இனியொரு பலமும்!!! எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளீர் முன்னணி ஏற்பாடு செய்துள்ள மகளீர் தினம் தற்போது கிளிநொச்சி புனித திரேசாள் மேய்ப்பணி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் மாதர் முன்னணியின் தலைவி முறாளினி தினேஸ் தலைமையில் நடைபெறுகின்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி நீதிமன்ற விஜயராணி சதீஸ்குமார் கலந்து கொண்டுள்ளார்.நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சரணவபவான் அவர்களும் சசிகலா ரவிராஜ், கொழும்பு கிளையின் மகளீர் அணி தலைவி ,கட்சியின் மகளீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஈழப் பெண்களும் இனியொரு பலமும்!!! எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளீர் தினம்!!
Sunday, March 10, 2024
நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் கொடியை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றி வைக்க மகளீர் தினம் சத்தியபிரமானம் எடுக்கப்பட்டதைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளின் முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப் மாலதியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்ததைத்தொடர்ந்து மகளீர் தின நிகழ்வு நடைபெற்றது அத்துடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது மகளிர்கள் மதிப்பளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
Source: Ananthan Vanitha
Social Plugin
Social Plugin