பொய்யாக நாட்டை மூடி வைத்திருக்காமல் திறப்பதற்கு கோரிக்கை விடுத்த பௌத்த துறவி: நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்!

திம்புலாகல பிரதேசத்திலுள்ள விகாரையின் மாத்தளை ஷாசரத்ன என்ற பௌத்த பிக்கு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் ஏ-9 வீதியில் அமர்ந்து இன்று(14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.


நாட்டை திறக்குமாறு வலியுறுத்தி இவ்வாறு நடு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குவை அங்கிருந்து அனுப்பி வைப்பதற்கு தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீண்ட நேரம் முயற்சித்த போதிலும், அவர் அங்கிருந்து நகரவில்லை.

அதனைத் தொடர்ந்து தம்புள்ளை மாநகரசபை மேயர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குவிடம் தகவல்களை கேட்டறிந்ததோடு, அவரது கோரிக்கை தொடர்பில் தெரிவிப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தின் அலுவலர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தித் தருவதாகக் குறிப்பிட்டு அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

அதன் பின்னர் தன்னை கைது செய்யாமல் பொலிஸாரால் வாக்குமூலம் மாத்திரம் பெறப்பட்டதாக குறித்த பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார். நாட்டை திறக்க வேண்டும் என்பதே அவரது இந்த ஆர்ப்பாட்டத்திற்கான காரணம் ஆகும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குறித்த பௌத்த பிக்கு நாட்டை திறக்க நடவடிக்கை எடுங்கள் அல்லது முழுமையாக முடக்குங்கள் , அவ்வாறில்லை என்றால் பொய்யாக நாட்டை மூடி வைத்திருக்காமல் திறப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று கோஷம் எழுப்பினார்.

Post a Comment

Previous Post Next Post