ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளில் விமானப்படையினரை ஈடுபடுத்த முடியும் என விமானப்படையின் எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்காக விமானப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விமானப்படையின் எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன முன்வைத்த யோசனைக்கு கல்வி அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.
முதலாவதாக வவுனியாவில் பின்தங்கிய பாடசாலைகளில் குறித்த பாடங்களை கற்பிப்பதற்காக விமானப்படையினரை ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களிலும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு விமானப்படையினரை ஈடுபடுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
Post a Comment
0 Comments