சீரியல் புகழ் நடிகை சித்ரா தற்கொலை.. ஹோட்டல் அறையில் தூக்கு!
சின்னத்திரை நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வருக்கு ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவருடன்தான், சித்ரா ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் கூறபாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற டிவி தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர் சித்ரா. இவர் டிவி சீரியலில் நடிப்பதற்காக சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த ஹோட்டலில் தூக்குப்போட்ட நிலையில் அவர் சரடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
28 வயதான சித்ரா, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவராகும். இப்படுகிறது. சித்ரா தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா. இதன்பிறகு இன்று காலைக்குள் தற்கொலை நடந்துள்ளது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்ராவின் சாவில் மர்மம் இருக்கு: மனோபாலா
பிரபல தொகுப்பாளினி சித்ரா இறப்பு செய்தி கேட்டவுடன் சின்னத்திரை நடிகர்கள் படை எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவமனையில் நிற்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவருடன் நடித்த சக நடிகர்-நடிகைகள் மற்றும் அவரது நண்பர்கள் சித்ராவின் உடலை மருத்துவமனையில் பார்த்து கதறி அழுதபடி வெளியில் வருகின்றனர்.
சித்ரா பல அவமானங்களை கடந்து வெற்றி பெற்ற ஒரு நடிகை அவர் பிரபலம் அடைந்த பின்பும் அனைவரிடமும் மரியாதையுடனும் அன்புடனும் பழகக்கூடியவர் என்று சித்ராவின் நினைவுகளை ஒரு பக்கம் பதிவு செய்து வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வந்த நடிகர் மனோபாலா கண்ணீர் விட்டு கதறி அழ தொடங்கினர். தைரியமான பொண்ணு பிறருக்கு தைரியம் சொல்லும் பொண்ணு இந்த முடிவு எப்படி எடுத்துச்சு என்று கூறியதோடு சித்ரா சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு சாவிற்கும் பின் ஒரு மர்மம் இருக்கும் அந்த வகையில் சித்ராவின் சாவிற்கு பின் மர்மம் இருக்கிறது என்று கூறி அழத் தொடங்கியவர். தயவு செய்து சின்னத்திரை நடிகர் நடிகைகள் யாரும் இது போன்ற முடிவை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
தனது தாய் தந்தைக்கு திருமணம் செய்து அழகு பார்த்தாராம் VJ சித்ரா.