பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓகஸ்ட் மாதம் தேர்தலை அழைப்பதற்கு முன்பு மத்திய ஊழியர்களுக்கு covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் கட்டாயமாக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
பிரதமரின் தேர்தல் வாக்குறுதியின்படி மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி முழுமையாக போடப்பட வேண்டும் என்று பலரது தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிவருகின்றன.
கூட்டாட்சி அரசாங்கத்தின் அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டாய covid-19 தடுப்பூசி மருந்து கொள்கையை இன்று செய்தி மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.இந்த மாதத்தின் இறுதிக்குள் இந்தக் கொள்கை நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
கனடாவில் விமானம் மற்றும் ரயிலில் பயணம் செய்ய விரும்பும் அனைவரும் கட்டாயமாக covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Covid-19 வைரஸ் தொற்று காரணமாக வீட்டிலிருந்தபடியே பணிபுரியும் மத்திய ஊழியர்களும் தங்களது வேலைகளை தக்கவைத்துக் கொள்ள எண்ணினால் கட்டாயமாக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வரைவு கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தின் நிர்வாகி தெரிவித்தார்.
லிபரல் கட்சியின் அரசாங்கம் கனடாவில் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டின் மத்திய அரசாங்கத்தின் ஆதாரங்களை உருவாக்குவதில் மாகாண அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறது. தடுப்பூசி சான்றிதழை கட்டாயமாக்குவது குறித்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் எரின் எதிர்ப்பு தெரிவித்தார்.
தலைநகர் ஒட்டாவாவால் சர்வதேச பயணத்திற்கு பயன்படுத்தக்கூடிய தேசிய தடுப்பூசி சான்றிதழை உருவாக்க இயலாது. ஏனெனில் கனடாவின் அனைத்து சுகாதார தரவுகளும் மாகாணம் மற்றும் பிரதேசங்களாக வகுக்கப்பட்டுள்ளன.
Post a Comment
0 Comments