நோர்வே நாட்டில், வில் அம்புகளை கொண்டு, பலர் மீது எய்து மர்மநபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன் பொதுமக்கள் மீது அந்த நபர் துப்பாக்கி சூடும் நடத்தி உள்ளார். இதையடுத்து மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
(© NTB/AFP via Getty Images GettyImages-1235863059.jpg) |
நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இரவு நேரத்தில் மர்ம நபர் இப்படி ஒரு பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளான்.
தலைநகரின் மையப்பகுதி என்பதால், எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.. அப்படித்தான், இரவு நேரத்தில் பொதுமக்கள் பிஸியாக இருந்தனர்.
மர்மநபர்
அந்த நேரம் பார்த்து அந்த மர்நபர் அங்கு வந்துள்ளான்.. கையில், விம், அம்புடன் வந்த அந்த நபர், மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளான்... மேலும், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளான்.. சுற்றி என்ன நடப்பது என்று தெரிவதற்கு முன்பேயே ஏராளமான மக்கள் சுருண்டு விழுந்தனர்.. மேலும் பலர் அங்கிருந்து தெறித்து உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினார்கள்.. அதற்குள் பாதுகாப்பு போலீசார் விரைந்து வந்து, அந்த நபரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்..
போலீசார்
ஆனால், அந்த நபர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளான்.. இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலின் முடிவில், இறுதியில் மர்மநபரை போலீசார் கைது செய்துவிட்டனர்.. ஆனால் இந்த திடீர் தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் போலீசார் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. காயம் அடைந்தவர்களை மட்டும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. அங்கு அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.
மக்கள்
இதையடுத்து 5 பேர் உயிரிழந்ததாக அடுத்த தகவல் வெளியாகி உள்ளது.. ஆனால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றே சொல்கிறார்கள்.. அந்த பகுதியில் உள்ள மக்களை வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.. தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.. ஒரு நபர் மட்டுமே இப்படி ஒரு பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது ஆச்சரியத்தையும் பதட்டத்தையும் கூட்டி வருகிறது..
விசாரணை
ஆனால், தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஒருவேளை இது பயங்கரவாத செயலா என்று பாணியில் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி முழுக்க கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் சொல்லும்போது, இந்த சம்பவம் மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மக்கள் பயந்து போயுள்ளனர்.. விசாரணை நடக்கிறது" என்றார்.
Social Plugin
Social Plugin