Type Here to Get Search Results !

ssss

கனடாவில் 2 இலட்சத்து 47ஆயிரத்து 703பேர் கொரோனாவால் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 768பேர் பாதிக்கப்பட்டதோடு, 52பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக இரண்டு இலட்சத்து 47ஆயிரத்து 703பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்து ஆயிரத்து 331பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 31ஆயிரத்து 725பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 234பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து ஐந்தாயிரத்து 647பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.


சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big