தன்னுடைய ஒரே அறிவிப்பில் இரு தரப்பு கனவுகளையும் நடிகர் விஜய் நொறுக்கிவிட்டார் என்றே சொல்லலாம்.. அந்த அளவுக்கு மிக பக்குவம் வாய்ந்த மனிதராக விஜய் வளர்ந்து வருகிறார்!
நேற்று விஜய் கட்சி ஆரம்பித்துவிட்டதாக ஒரு தகவல் தீயாக கசிந்தது.. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர் மறுப்பு சொல்லி, மக்கள் மன்றத்தை கட்சியாக பதிய விண்ணப்பித்துள்ளதாக கூறினார்..அதற்கு பின்னாடியே விஜய் வந்து இன்னொரு அறிக்கை அறிக்கை வெளியிட்டு, என் அப்பாவின் கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டு போனார். இதையடுத்து ரசிகர்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளால் பெருத்த குழப்பமாகி விட்டனர்.. இப்போதும் அதேமனநிலையில்தான் உள்ளனர்.
இந்நிலையில், எஸ்ஏசியின் அதிரடிகள் குறித்தும், விஜய்யின் நிலைப்பாடுகள் குறித்தும் அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:
கட்சி
"கட்சியை விஜய் ஆரம்பிக்கவில்லை என்று சொன்னபோதே இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட வேண்டியதில்லை.. அவர்தான், என் அப்பாவின் கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று தெளிவாக சொல்லி இருக்காரே.. ஆனால், எஸ்ஏசியின் நகர்வுகளுக்கு காரணம் பாஜகவா இருக்கும் என்று தெரிகிறது.. ரஜினியின் முடிவால் ஏற்பட்ட ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், இப்படி விஜய் பக்கம் தன்னுடைய கவனத்தை பாஜக திருப்புவதாக இருக்கலாம்.
வாய்ப்பு
ஏற்கனவே பாஜகவில் சேருவது, பிறகு பாஜகவில் இணைய வாய்ப்பில்லை என்று எஸ்ஏசி பேட்டி தந்தது என்று சுற்றி சுற்றி சமீப காலமாக பாஜகவை மையப்படுத்தியே விஜய்யின் அரசியல் நகர்வுகள் பேசப்பட்டு வருகிறது.. ஏதோவொரு பேட்டியில்கூட பாஜக அரசை பாராட்டியதாகவும் தெரிகிறது.. அது அவரவர் விருப்பமாக இருக்கலாம்.
பச்சைக்கொடி
ஆனால் இப்போது கட்சி என்று பதிவு செய்திருப்பதின் மூலம் பல சந்தேகங்கள் எழுகின்றன.. முதலில் கட்சியை ஆரம்பித்துவிட்டு, விஜய்யை அதில் சேர்க்காமல், குடும்பத்தினரையே நிர்வாகிகளாக போடும்படி ஐடியா தந்ததே பாஜக தரப்பாககூட இருக்கலாம்.. ஏற்கனவே ரெயிடு நடத்தி ஒரு கிலியை அவருக்கு ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விரைவில் அப்பா ஆரம்பித்துள்ள கட்சிக்கு விஜய் பச்சைக் கொடி காட்டுவார் என்று நம்புகிறார்கள்.
அரசியல் ஆசை
இது ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில், பாஜக தரப்புக்கும், எஸ்ஏசிக்கு வேண்டுமானால் சந்தோஷத்தை தரலாம்.. ஆனால், விஜய்க்கு அப்படி இல்லை.. அவருக்கு அரசியல் ஆசையே எப்போதுமே கிடையாது.. மிக மென்மையான மனிதர்.. சினிமாவில் வந்ததில் இருந்தே அரசியலின் மீது பெரிய அளவு ஆர்வம் காட்டவில்லை.. தானுண்டு தன் நடிப்புண்டு என்றிருப்பவரை, ரசிகர்களும், எஸ்ஏசியும் உசுப்பேத்தி விட்டுள்ளனர்.
Social Plugin
Social Plugin