வருஷா வருஷம் டாப் 10 படங்கள் தான் பாத்து இருப்போம். 2019 இன் ஆப்(பு) 10 படங்கள். இந்த படத்துல அப்டி என்ன தான் செஞ்சு வச்சிருக்காங்கன்னு நம்பி போனா, படம் பாக்க வந்த நம்பள வச்சு செஞ்சு அனுப்பிய படங்கள பாப்போமா?
தேவ் - ஏன்பா கார்த்தி, நல்ல படமா நடிக்கிற, ஆனா அப்பப்போ இப்டி காவு வாங்குற படமா போய் மாட்டிக்கிறியே, இது உனக்கு தேவயான்னு கேக்குற மாதிரி இருந்துச்சு. ஸ்கூல்ல எல்லார் வகுப்புலயும் ஒருத்தன் இருப்பான் - பாத்தியா என்கிட்ட வெளிநாட்டு பென்சில் இருக்கு, இது எவ்ளோ காஸ்டலி தெரியுமான்னு. அப்டி பணக்கார பசங்க பண்றத காட்டி பெரும பீத்திக்கிற படமா, மொத்த படத்தின் காட்சிகளும் அந்நியமா இருந்துச்சு. ஒளிப்பதிவு நல்லா இருந்துட்டா போதும், சூப்பர் படம்ன்னு கொண்டாடிடுவாங்கன்னு, திரைக்கதைல கோட்ட விட்டுட்டாங்க. விக்னேஷ்காந்த் காமெடி சீன்ஸ்ன்னு Youtubeல தேடினாலும் கிடைக்காத அளவுக்கு அரிய நகைச்சுவை காட்சிகள் வேற.
ஐரா - பட்டர்பிளை எபெக்ட்ல படம் எடுக்குறேன்னு பட்டாம்பூச்சியே கடுப்பாற அளவுக்கு வந்த திகில் படம். பேய் பழிவாங்கறதுக்கு இவங்க சொன்ன காரணம் இருக்கே. இனிமேல் ஐ.டி. கம்பெனில எவனாச்சும் லிப்ட்ட நிறுத்தாம போவான்?
பட நன்றி - கூகுள்
மிஸ்டர் லோக்கல் - பும்ராவும், ஷமியும் ஓப்பனிங் பண்ணா எப்படி இருக்கும்? நான் பந்து வீச்சுல சொல்லல, பேட்டிங்ல. அப்படி பார்ம்ல இல்லாத சிவகார்த்திகேயனும், பார்ம்ன்னா என்ன? அப்பிளிகேஷன் பார்ம்மான்னு கேக்குற அளவுக்கு கொலவெறி பார்ம்ல இருந்த ராஜேஷும் சேர்ந்து நடத்திய காமெடி கதகளி. சீரியல் மாதிரி நடுநடுவில கெக்கே பெக்கே ன்னு சிரிக்கிற சத்தம் போட்டிருந்தா கூட இது ஜோக் போலன்னு நமக்கு தெரிஞ்சிருக்கும். சதீஷ் - சிவர்த்திகேயன் - யோகி பாபு - ரோபோ ஷங்கர் இருந்தும் ஒரு காமெடி கூட எடுப்படல. சரி சிவகார்த்திகேயன் படத்துல பாட்டாச்சும் நல்லா இருக்குன்னா என்னடீ நிருமலா, உனக்கு இருமலான்னு ஹிப் ஹாப் அண்ணன் காது மேல ஏறி மிடிச்சிட்டு இருந்தாரு.
பட நன்றி - கூகுள்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - பட்ட காலிலே படும்ன்னு Mr. Localல்ல அடி வாங்குன சிவகார்த்திகேயன்ன, வாங்கண்ணே கட்டு போட்டு விடுறேன்னு, யூடுப் பசங்க தயாரிப்பாளர்ன்னு குட்டு வாங்க வச்ச படம். Youtubeல 10 நிமிஷ வீடியோவா பாக்கும் போது சுவாரசியமா இருக்குற விஷயத்தை , படமா 2 மணி நேரத்துக்கு மேல எடுக்க தெரியாம அறுத்துட்டாங்க. இது படம் தானா இல்ல Youtube Autoplay ஓடிட்டு இருக்கான்னு சந்தேகம் வர அளவுக்கு மொக்கை மேல் மொக்கை காட்சிகள். வாத்தியாரே, அடுத்த மர்டர்ன்னு தேவ் அடுத்து விக்னேஷ்காந்த் நடத்திய சிறப்பான தரமான சம்பவம்
அருவம் - உணவு கலப்படம்ன்னு நல்ல கதைக்கருவை எடுத்துக்கிட்டு அதுல திகில கூட்டுறேன்னு காமெடி பண்ணிருந்த படம். தமிழ் சினிமால ஹீரோ, ஹீரோயின், அவங்களோட அப்பா அம்மா தங்கச்சியலா லூசா பாத்துருப்போம். ஒரு பேய்ய லூசா பாத்துருக்கீங்க? இந்த படத்துல பாப்பீங்க. செத்து, நல்லா ரெஸ்ட் எடுத்து வந்து பழிவாங்கும் பேய். அதுவும் புது புது வித்தைகளோட. என்னென்னா கார் டயர பஞ்சர் ஆக்குறது, கழுத்த நெரிக்கறது, மாடில இருந்து தள்ளி விட்றதுன்னு புது கண்ணா புதுசு தான். கிளைமாக்ஸ்ல வில்லன் மலைல தொங்கிட்டு இருப்பான், விட்டா அவனே கீழ விழுந்து செத்துருவான் கொஞ்ச நிமிசத்துல. அவன காப்பாத்தி விட்டுட்டு, 2 நிமிஷம் வசனம் பேசிட்டு கொன்னுரும். நான் தான் சொன்னேன்ல லூசு பேய்ன்னு.
தேவி 2 - வருஷந்தவறாம மழை வருதோ இல்லையோ, AL விஜய் கிட்ட இருந்து ஒரு மொக்க படம் கண்டிப்பா வரும். முதற்பாகம் அப்டி என்ன ஓடுச்சுன்னு இவங்க பார்ட் 2 எடுத்தாங்கன்னு தெரில. தேவையில்லாத ஆணிக்கே ஒரு தேவையில்லாத ஆணி. ஹாரர் காமெடியில் ஹாரரும் இல்லை, காமெடியும் இல்லை.
கொரில்லா - இயக்குனர்களில் விஜய்ன்னா, நடிகர்களில் ஒவ்வொரு வருஷமும் யார் அதிக மொக்கை படங்கள் தருவது என விக்ரம் பிரபுக்கும், ஜீவாவுக்கும் இடையே கடும்போட்டி நிலவும். 2019ல விக்ரம் பிரபு ரெஸ்ட் எடுத்துக்கொண்டதால் போட்டியின்றி ஜீவா வென்றுள்ளார். வங்கியை கொள்ளையடிக்கிறேன்னு படம் பாக்க வந்தவங்களுக்கு தொல்லை தந்த படம். இதுல போராளிகள் முகப்புத்தகத்தில் போடும் ஸ்டேட்டஸ் எல்லாம் பஞ்சு வசனங்களாக இடைச்சொருகல் வேற. ஒரே படத்தில் விவசாயிகள் கடனை அடைக்க வழி சொல்றாங்களாம்.
சங்கத்தமிழன் - விக்ரமுக்கு ஸ்கெட்ச் போட்டு விட்டு, அடுத்ததா யாருன்னு இயக்குனர் விஜய் சந்தர், நடிகர் விஜய் சேதுபதியின் கரியர்க்கு சங்கூத முயற்சித்த படம். தலைப்பு மாதிரியே சங்ககாலத்துல வரவேண்டியது, பல யுகங்கள் கழித்து வெளியாகி இருக்கு. முதற்பாதி முடியரதுக்குள்ளேயே ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிருந்தா, படம் முடியரதுக்குள்ள நம்பள காப்பாத்திக்கலாம்.
பட நன்றி - கூகுள்
தர்மபிரபு - ஹீரோ ஆசை யார விட்டுச்சு? எமலோகத்துல நடக்குற கதை, வாஸ்தவம் தான். அதுக்குன்னு படம் பாக்றவங்களுக்கு தத்ரூபமா இருக்கணும்ன்னு எங்கள அங்க அனுப்ப கூடாதுல? படத்தோட கதை - பூலோகத்துல இருந்து மேலோகம் வரவங்க, என் சாவுக்கு இவங்க தான் காரணம்னு சொன்னா, 1+1 ஆஃப்பர்ல குற்றம் சாட்டப்பட்டவரையும் மேலோகத்துக்கு கூட்டிட்டு வந்துருவாங்க. ஹ்ம்ம், அப்போ இந்த பட இயக்குனரோட நெலமைய 'மேல' நெனச்சா?
கடாரம் கொண்டான் - ஜெட் வேகத்துல போகவேண்டிய த்ரில்லர் கதைய, ஷேர் ஆட்டோல போற மாதிரி, நிறுத்தி நிதானமா ஓட்டி, படம் பாத்தவங்கள டயர்டு ஆக்கிட்டாங்க. சார் இந்த படத்துல உங்களுக்கு சூப்பர் கெட்-அப் சார்ன்னு சொன்னா போதும், சின்ராச கைல பிடிக்க முடியாதுன்னு விக்ரமும் வந்து தலைய நீட்டிட்டாரு. சார் நான் சும்மா ஷூட்டிங்க வேடிக்க பாக்க வந்தேன், என்ன புடிச்சி நடிக்க வச்சிட்டாங்கன்னு எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லன்னு துணை நடிகர்களோட நடிப்பு, வஆவ்வ்வ்வ்.
ஆப்புக்கே ஆப்படித்து ஆட்டுக்கால் பாயா ஊத்திய படங்களும் இருக்கு, இந்த படங்கள்லா வெளியாச்சான்னு உங்களுக்கே சந்தேகம் வரும்.
நாலும் நாலும் எட்டு, உனக்கு வைக்க போறேன் பொட்டுன்னு, பட்டுன்னு அடிச்சா பொட்டுன்னு போக வைக்கிற பொட்டு
கமலுக்கு வேட்டையாடு விளையாடு மாதிரி, என் அண்ணன் ஷாமுக்கு நான் தான்டா செய்வேன், அப்டி தான்டா செய்வேன்னு ஷாமின் கொலவெறி ரசிகன் நடத்திய கொலையாட்ட காவியம் - காவியன்
ஒண்ணு வாங்குன்னா ஒண்ணு இலவசம்ன்னு விஜய் தேவி 2 உடன் தந்த வாட்ச்மேன்
டேய் ஜுஜுபி, நான்லா ஒண்ணு வாங்குன்னா ரெண்டு தருவேன்னு யோகிபாபு தர்மப்பிரபுவுடன் தந்த ஜாம்பி, கூர்க்கா
சக்ரின்னா பொட்டு வச்சிட்டு சக்கர பொங்கல் சாப்பிடறவன் நெனச்சியா, பழைய ரெக்கார்ட் எடுத்து பாருன்னு பில்லா 2 அடுத்து சக்ரி டோலெட்டி கொடுத்த கொலையுதிர் காலம்.
நன்றி: Ta.Quora
Post a Comment
0 Comments