சென்னையில் இன்று ஒரே நாளில் 1,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 44,205 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இன்று புதிதாய் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது. இன்று 39 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 35,339 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் 645 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24,670 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,889 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் சென்னையில் தொடர்ந்து 20 ஆம் நாளாக 1000-ஐ கடந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments