Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

கருப்பு ஜூலை பற்றி கனேடிய பிரதமர் கவலை தெரிவிப்பு!

இலங்கையில், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட, கறுப்பு ஜூலை படுகொலைகளின், 38ஆவது ஆண்டினை நினைவு கூருவதில், கனடா வாழ் தமிழ் மக்களுடனும், உலகளாவிய தமிழ் சமூகத்துடனும் இணைந்து கொள்வதாக, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 23ஆம் திகதி ஆரம்பித்த கலவரங்கள், 30ஆம் திகதிவரை இடம்பெற்றிருந்தன.


3000 வரையிலான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
ஜூலை கலவரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், கனடிய அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

ஜூலை கலவரம் இடம்பெற்ற சில மாதங்களில், கனடிய அரசின் விசேட நடவடிக்கை மூலம், 1800 தமிழ் மக்கள் கனடாவில் குடியேற வழி வகுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், இன்று, வலுவான, ஒருங்கிணைந்த, கனடாவை கட்டியெழுப்புவதில், தமிழ் சமூகம் மிகப்பாரிய பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
- East FMஆல் பதிவிடப்பட்டது -

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big