Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000 - மாநகர முதல்வர் அறிவிப்பு.

யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000 - மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் அறிவிப்பு.

இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பமாவதாக யாழ் மாநகர சபையில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாநகரத்தினை தூய்மையாக பேணுவதற்காக பொது இடங்களில் குப்பை கொட்டுவோர், வெற்றிலை துப்புவோர், வாகனங்களை பொதுவிடங்களில் நிறுத்துவோர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கும், குற்றமிழைப்போருக்கு தண்டப்பணம் விதிப்பதற்கு யாழ்ப்பாண மாநகர ஊழியர்கள் ஐவர் தனியான சீருடை அணிந்து நாளையிலிருந்து கடமையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்ததார்.
பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கு 5 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் வெற்றிலை துப்புவோருக்கு2 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிட படவுள்ளதோடு குறிப்பாக யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த காவலர்கள் தமது பணியினைச் செயற்படுத்துவார்கள் என தெரிவித்தார்.


சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big