Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

பிரஜாவுரிமை கோரும் ஈழ அகதிகள்!

இந்திய பிரஜாவுரிமை வழங்குமாறு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மண்டபம் அகதி முகாமிலுள்ளவர்களே கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்திய மத்திய உள்துறை அமைச்சின் தரவுகளுக்கமைய, சுமார் ஒரு இலட்சம் இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

58,843 இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழகத்தில் 108 முகாம்களில் தங்கியுள்ளதுடன், தமிழகத்தில் முகாம்களில் இல்லாத அகதிகளாக 34,135 பேர் தங்கியுள்ளதாக அந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
மேலும், 54 இலங்கை தமிழ் அகதிகள் ஒடிசாவின் மல்கன்கிரியில் உள்ள அகதி முகாமில் தங்கியுள்ளதாகவும், இந்திய மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு இந்தியா பிரஜாவுரிமை வழங்க வேண்டும் என ஈழ அகதிகள் பாதுகாப்புக் குழு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பா.புகழேந்தி அண்மையில் தெரிவித்திருந்தார்.



Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big