Type Here to Get Search Results !

ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது - மு.க‌.அழகிரி பரபரப்பு பேச்சு!

நிதியை கட்டாயப்படுத்தி திருவாரூரில் போட்டியிட செய்தனர். ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை வாங்கித்தந்ததே நான்தான். ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் கருணாநிதி அளித்தார். கருணாநிதியிடம் நான் எம்பி பதவியோ, அமைச்சர் பதவியோ கேட்கவில்லை, அவராக கொடுத்தது.  ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது.

திருமங்கலம் இடைத்தேர்தல் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற்றோம், உலகமே திருமங்கலம் இடைத்தேர்தலை உற்று நோக்கியது. திருமங்கலம் பார்முலா என்பது எங்களது கடினமான உழைப்பு.


திருமங்கலம் தேர்தலில் திமுக வெற்றிக்கு கலைஞரின் கடின உழைப்பு மட்டுமே பார்முலா வேறில்லை. திருமங்கலத்தில் பணம் கொடுத்து வென்றதாக கூறினார்கள் ஆனால் கடும் உழைப்பால் தான் வெற்றியை காட்டினோம்.

திருமங்கலம் தேர்தலில் ஜெயிக்க தவறி இருந்தால் திமுக ஆட்சியே அப்போது கையை விட்டு போயிருக்கும். திருமங்கலம் தேர்தல் என்றாலே இந்தியாவே திரும்பி பார்க்கிறது. பயம் என்றால் நீங்கள் நினைப்பது போல் அல்ல, 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம்.

திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்குமாறு மு.க.ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் என்னிடம் மன்றாடினர். கலைஞர் கேட்டுக்கொண்டதால் தான் திருமங்கலம் தேர்தலில் நாம் பணியாற்றி 40,000 ஓட்டு வித்தியாசத்தில் வென்றோம். பல நேரங்களில் பல சோதனைகள் வந்தாலும் அதனை கடந்தும் வந்து இருக்கின்றோம்.

திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேற வில்லை.பேராசிரியர் க.அன்பழகனுக்கு தெரியாமல் என்னை கட்சியில் இருந்து நீக்கினர்.

எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்.  இப்போதும் நான் உங்களில் ஒருவன் மதுரை நமது கோட்டை இதை யாராலும் மாற்ற முடியாது.

பிறந்த நாளுக்காக பொதுக்குழுவே வருக என கட்சியினர் போஸ்டர் அடித்ததில் என்ன தவறு? ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே வருக என போஸ்டர் அடிக்கிறார்கள். ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big