அசுரன் திரைப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகரை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றிமாறன் இப்பொழுது சூரியை ஹீரோவாக வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
காமெடி கதாபாத்திரங்களில் இதுவரை நடித்து வந்த சூரி இப்போது முதன்முறையாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திற்காக உடம்பை தாறுமாறாக ஏற்றியுள்ள புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது.
வெற்றிமாறன் திரைப்படங்கள் என்றாலே ராவான படங்கள் என்பதால் மீசையும் தாடியுமாக ஆளே மாறிவிட்ட நடிகர் சூரி-யின் புது லுக் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தவிர்க்க முடியாதசூரி என்பதைவிட பரோட்டா சூரி என்றாலே பெரும்பாலான மக்களுக்கு தெரிகின்ற நிலையில் வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் இவர் நடத்திய பரோட்டா காமெடி அட்டகாசங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. தீபாவளி, பீமா உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் வந்து எட்டிப் பார்த்து விட்டு சென்ற சூரி இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உள்ளார்.
தனி கவனத்தை
விஜய், அஜித், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி வரும் சூரி சிவகார்த்திகேயனுடன் இணையும் திரைப்படங்கள் என்றாலே ரொம்ப ஸ்பெஷலாக இருக்கும் நிலையில் இவர்களது கூட்டணியில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது.
காமெடிக்காகவே
அந்த வகையில் மான் கராத்தே, சீமராஜா திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் சூரி மீண்டும் இணைந்த நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் காமெடிக்காகவே பல நாட்கள் ஓடி எதிர்பாராத அளவுக்கு வசூலை குவித்து 100 நாட்களை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடியது.
உடலை தாறுமாறாக
இவ்வாறு சூரி என்றாலே காமெடி என சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போது நடிகர் வெற்றிமாறன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இந்தத் திரைப்படத்திற்காக சூரி உடலை தாறுமாறாக ஏத்தி வருவதோடு முறுக்கு மீசை தாடியுடன் ஆளே சும்மா கெத்தாக மாறியுள்ளார்.
கருப்பு சட்டை கருப்பு பேண்ட்
இந்த நிலையில் கருப்பு சட்டை கருப்பு பேண்ட் முறுக்கு மீசை நீண்ட தாடி என பார்க்கவே ராவான லுக்கில் இருக்கும் சூரி இத்தகைய சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை வெளியாகி வைரலாகி வர படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
Filmibeat
Post a Comment
0 Comments