Type Here to Get Search Results !

பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரிய வழக்கு ஒத்தி வைப்பு!

பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  

இலங்கை குற்றவியல் சட்டப்படி சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லையின் கீழ் இந்த விண்ணப்பம் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 சிறீலங்கா பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விண்ணப்பம் இன்று பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த மனு அழைக்கப்பட்ட போது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், சந்திரசேகரம், செலஸ்ரின் உள்ளிட்ட 6இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

பொலிஸாரின் விண்ணப்பதில் உள்ள விடயம் தொடர்பில் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர்.

அதனால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த விண்ணப்பதை விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.

அதனால் வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்திவைத்த பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை சேர்ப்பிக்க உத்தரவிட்டது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big