சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 6 பேருந்துகளை இதுவரையில் தேசிய போக்குவரத்து அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதேநேரம், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் ஒரு செயற்பாடாக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் பெயர் விபரங்களும் சேகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பேருந்துகளில் அதிக பயணக் கட்டணங்கள் அறவிடப்படுகின்றமை தொடர்பில் போக்குவரத்து அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.
Post a Comment
0 Comments