Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

இங்கிலாந்துக்கு குடியேற முயன்று ஆங்கில கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து!

பிரிட்டனில் குடியேற சட்ட விரோதமாக ஆங்கில கால்வாய் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய கண்டத்தையும் பிரிட்டனையும் பிரிக்கும் வகையில் ஆங்கிலக் கால்வாய் உள்ளது. இதில் ஏராளமான தீவுகள் உள்ளன.

ஈரான், ஈராக், சிரியா என பல நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வந்து சட்ட விரோதமாக இங்கிலாந்தில் தஞ்சம் புகுவது தொடர்கிறது.

சிறிய படகுகளில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வரும் பலரும் கரை சேர்ந்து விடுகின்றனர். ஒரு சிலர் படகு கவிழ்ந்து உயிரை இழக்கின்றனர்.

இப்படி சட்டவிரோதமாக தஞ்சம் புகுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பிரான்சில் இருந்து ஈரான் நாட்டைச் சேர்ந்த குர்திஷ் குடும்பம் பல ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சி செய்துள்ளன. நேற்று காலை அவர்கள் வந்த படகு கவிழ்ந்தது.

இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நெஜாத் (35), அவரது மனைவி சிவா முகமது பனாஹி (35), ஒன்பது வயது மகள் அனிதா, ஆறு வயது மகன் ஆர்மின் மற்றும் கைக்குழந்தை ஆகியோர் ஆங்கிலக் கால்வாயில் விழுந்தனர்.

இதில் ஐந்து பேரும் உயிரிழந்துவிட்டனர். இதில் நான்கு பேர் உடல் கிடைத்துவிட்டது. கைக்குழந்தை ஆர்டின் உடல் கிடைக்கவில்லை.

தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி ஈரானில் இருந்து அவர்கள் தப்பிப் பல நாடுகளைக் கடந்து பிரான்ஸ் வந்துள்ளனர். சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேற அவர்கள் 22,000 பவுண்டுகளை கடத்தல்காரர்களுக்கு கொடுத்துள்ளனர்.

இது குறித்து ஈரானில் உள்ள நெஜாத்தின் சகோதரர் அலியை பிபிசி தரப்பில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது அவர், “கைக்குழந்தை உயிருடன் உள்ளதா இல்லையா என்பது பற்றிய தகவல் இல்லை.

இது தொடர்பான குழப்பமான தகவல் நிலவுகிறது. எங்கள் குடும்பம் மிகப்பெரிய சோகத்தில் உள்ளது. என் தந்தை, அம்மா மற்றும் சகோதரிகள் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அழுதுகொண்டே உள்ளனர்.

பிரிட்டனுக்கு செல்வதற்காக அவர்கள் அதிக பணம் செலவழித்துள்ளனர்” என்றார்.

உயிரிழந்த குடும்பத்தினர் (Image: BBC)




Tags

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big