Type Here to Get Search Results !

ssss

பேருந்துகளில் பயணிப்போர் முக உறைகளை அணிவது கட்டாயம்!

டொரோண்டோவில், TTCயில் பயணிப்போர் முக உறைகளை அணிவது கட்டாயம் ஆக்கப்படலாம் என, நகரமுதல்வர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார். 

பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் அதிகரிக்கும் நிலையில், தனிமனித இடைவெளியை பின்பற்றுவது சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அண்மையில், பொதுப்போக்குவரத்துகளில் பயணிப்போர் முக உறைகளை அணிய வேண்டுமென ஒண்டாரியோ மாகாண அரசும் பரிந்துரைத்திருந்தது. எனினும், எந்தவித கட்டாயமாக்கலும் கொண்டுவரப்படவில்லை. 

அதேவேளை, பொதுப்போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோர், முக உறைகளை அணிய வேண்டுமென, பிராம்ப்டன் மாநகரசபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big