Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      இந்த “5” உணவிற்கு 'NO' சொல்லலைன்னா கடும் உடல் நல பாதிப்பு ஏற்படும்!

      மதுபானத்துடன் சேர்த்து இந்த '5' உணவிற்கு 'NO' சொல்லலைன்னா கடும் உடல் நல பாதிப்பு ஏற்படும்.!

      ஆல்கஹால் (Alcohol) அல்லது மதுபானங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, மது பானம் அருந்துவதால், புற்றுநோய் முதல் பல தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிந்தும் பலர் அதற்கு அடிமையாக உள்ளனர். மது அருந்துவதே கெடுதல் என்ற நிலையில், அதோடு எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். ஆல்கஹால் கூட சாப்பிடக்கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

      ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை மது பானம் அருந்தும் போது நிச்சயம் தவிர்க்க வேண்டும். சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலம் உள்ளதால் ஜீரணம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். உடலில் செரிமன அமைப்பில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது.

      ஆல்கஹாலுடன் அதிக காரமான உணவை ஒருபோதும் சாப்பிட கூடாது.  ஆல்கஹால்  அருந்தும் போது, அதிக கார உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கெடுதல். காரமான உணவில் கேப்சைசின் உள்ளது. இதனால், ஹீட் பர்ன் எனப்படும் உடல் வெப்பதினால் ஏற்படும் புண்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

      மது அருந்தும் போது அதனுடன் பர்கர் சாப்பிடவே கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  அவ்வாறு சாப்பிடும் போது, அதை ஜீரணிக்க கல்லீரல் கடுமையாக உழைக்க வேண்டும்  என்பதோடு,  அதிலிருந்து வெளியாகும் கொழுப்பு திசுக்களில் படிந்துவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

      சாக்லேட்டில் கொழுப்பு, கோகோ மற்றும் காஃபின் ஆகியவை அதிகம் உள்ளது. அதை பீர் உடன் உட்கொள்வது அதிக போதையை  ஏற்படுத்தும். மேலும் தாகம் அதிகம் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

      பொரித்த உணவில் உடலுக்கு பெரும் ட்தீங்கு விளைவிக்கும் சாசுரேடட் கொழுப்பு (Saturated Fat) அதிகம் உள்ளது. அதிலும் மது அல்லது பீர் எடுத்து கொள்வதால் செரிமானம் மேலும் கடினமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.  இதனால், இரண்டையும் ஒன்றாக உட்கொள்வதால் வயிற்று வலியை ஏற்படும். அதில் உள்ள சோடியம் உங்கள் உடலில் நீர் சத்து குறைவதோடு உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.


      Source: © 1998-2021 ZEE MEDIA CORPORATION LTD (AN ESSEL GROUP COMPANY), ALL RIGHTS RESERVED.

      Post a Comment

      0 Comments