முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் நடாத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வல்வெட்டித்துறையில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக அதன் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 54 பாடசாலை சிறுமிகள் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியிலுள்ள வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்திலும் இன்று அனுஷ்டிப்புகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் படுகொலையானவர்களுக்கு யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று(14) அஞ்சலி செலுத்தினார்.
Post a Comment
0 Comments