கிரிப்டோகரன்சி உலகின் மிகப்பெரிய ஹேக்கிங் என்று வர்ணிக்கப்படும் பாலி நெட்வொர்க் ஹேக்கிங்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பாலி நெட்வொர்க் நிறுவனத்தில் செய்யப்பட்ட 4550 கோடி ரூபாய் ஹேக்கிங்கில் கிட்டத்தட்ட பாதி தொகையை ஹேக்கர்கள் திருப்பி கொடுத்துள்ளனர்.. இவர்கள் ஏன் இந்த தொகையை திருப்பி கொடுத்தனர், இந்த ஹேக்கிங் எப்படி நடந்தது என்று பார்க்கலாம்.
கிரிப்டோகரன்சி தற்போது உலகம் முழுக்க நவீன பொருளாதார புரட்சியாக உருவெடுத்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் எலோன் மஸ்க் தொடங்கி இந்திய உள்ளூர் கோடீஸ்வரர்கள் வரை பலர் தற்போது கிரிப்டோகரன்சி பக்கம் தங்களின் கவனத்தை மொத்தமாக திருப்பி உள்ளனர். அதிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கிரிப்டோகரன்சி மதிப்பு பலரை இதை நோக்கி இழுத்து வருகிறது.
புதிய தொழில்நுட்பமான பிளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் கிரிப்டோகரன்சி இயங்கி வரும் நிலையில் இதில் சில பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன. ஹேக்கர்கள் கைவரிசை காட்டும் வகையில் சின்ன சின்ன ஓட்டைகளும், கள்ளச்சந்தையில் புழுங்குவதற்கு ஏற்ற வசதிகளும், மோசடி செய்வதற்கு என்றே பல இணையங்களும் கிரிப்டோகரன்சி உலகில் உள்ளது. எல்லா விடயங்களை போலவே கிரிப்டோகரன்சியிலும் பூ பாதையும் இருக்கிறது.. சிங்கப்பாதையும் இருக்கிறது. சரி கிரிப்டோகரன்சி உலகில் நடத்தப்பட்ட ஹேக்கிங் விடயத்திற்கு வருவோம்.
இனைய ஊடறுப்பு(ஹேக்கிங்)
நாம் பொதுவாக பயன்படுத்தும் ரூபாய், டொலர் போன்ற பணங்களை மாற்றுவதற்கு பண பரிவர்த்தனை அமைப்புகள் பல இடங்களில் இருக்கும். அமெரிக்கா செல்லும் போது ரூபாயை கொடுத்து டொலராக மாற்றிக்கொள்ள முடியும். அதேபோல் இணையத்திலும் கிரிப்டோகரன்சி உலகில் இப்படி பண பரிவர்த்தனை, பண மாற்று அமைப்புகள் நிறைய உள்ளன. அதில் முக்கியமான நிறுவனம்தான் பாலி நெட்வொர்க்(Poly-network). இதன் பெயரிலேயே அர்த்தம் இருக்கிறது. பல கிரிப்டோகரன்சிகளை பரிமாற்றம் செய்யும் நெட்வொர்க் அமைப்புதான் இது. உங்களிடம் இருக்கும் கிரிப்டோகரன்சிகளை வேறு ஒருவருக்கு அனுப்பவும், ஒரு வகையான கிரிப்டோகரன்சிகளை கொடுத்துவிட்டு வேறு வகையை பெற்றுக்கொள்ளவும் இந்த நிறுவனம் உதவும்.
முன்னணி நிறுவனம்
கிரிப்டோகரன்சி உலகில் முன்னணி நிறுவனமாக இது பார்க்கப்படுகிறது. தினமும் இங்கு பல மில்லியன் டாலர்கள் எளிதாக புழங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் பாலி நெட்வொர்க்(Poly-Network) நிறுவனம் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை.. ஹேக்கர்கள் உள்ளே புகுந்து "என்ஜாயி எஞ்சாமி" என்று ஜாலியாக இருப்பதை எல்லாம் சுருட்டிவிட்டு டாட்டா காட்டிவிட்டு சென்று உள்ளனர். இந்திய மதிப்பில் இவர்கள் சுருட்டிய பணம் 4550 கோடி ரூபாய். எவ்வளவு சுழியம்(0) வருகிறது என்று பக்கத்தில் போட்டு நீங்களே ஆச்சர்யப்பட்டுக்கொள்ளுங்கள்.
Post a Comment
0 Comments