Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      திருகோணமலையில் வீடு புகுந்து தாக்கிய போதை பொருள் குழு- மாபியா குழுக்களுக்கு துணைபோகும் பொலிஸார்

      போதைப் பொருள் பாவனையால் பல மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்கள் சீரழிவதற்கு முக்கிய காரணமே இவ்வாறான போதைப் பொருள் பாவனை தான்.

      திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் இன்று(18) புதன் கிழமை போதைப் பொருள் குழுவொன்று, குடும்பஸ்தர் ஒருவரின் கழுத்தை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது

      செல்வநாயகபுரம் முருகன் கோயில் பகுதியில் போதைப் பாவனையாளர்கள் அதிகளவில் அட்டகாசம் செய்வது தொடர்ந்து வருவதாகவும், இன்றும் வீடொன்றில் புகுந்து பெண்கள், குழந்தைகள் உள்ள குடும்பம் என்றும் பாராமல் அங்குள்ள ஒருவரை சரமாரியாக தாக்கி வெட்டிச் சென்றுள்ளனர்.

      தற்போது குறித்த நபரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

      திருகோணமலையில் அதிகளவான பகுதிகளில் கஞ்சா உட்பட பல போதைப்பொருட்கள் பாவிக்கப்படுவதாகவும், இதற்கு முக்கியமான விற்பனையாளர்களை பொலிஸார் கண் துடைப்பிற்காக கைது செய்வதும் பின் விடுதலை செய்வதுமாக உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

      இதேவேளை, திருகோணமலையில் கடந்த ஆண்டு படிக்கும் மாணவர்களிடையே போதைப்பொருள் விற்பனை செய்ததாக தனியார் வகுப்பு ஒன்றும் முறையாக மாட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

      எனினும் இவ்வாறான போதைப்பொருள் மாபியா குழுக்களும், அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளும் எம் சமூகத்தில் உண்டென்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.

      குறிப்பாக இதற்கு பின்னால் இலங்கைப் படை உயர் அதிகாரிகள் சிலரும், கொழும்பை மையமாக கொண்ட சில அரசியல்வாதிகளும் பின்னணியில் இருப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.



      Tags

      Post a Comment

      0 Comments

      Click To Here On Every Day For Development

      Phots Shot

      8/Photography/grid-big