முதல் தேர்தலில் அசத்திய விஜயின் த.வெ.க கட்சி.. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!!

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 4) காலை எண்ணப்பட்டு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. 



MAY 04, 2026 21:35 IST

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி

கேரளா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி 100 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்து ஆட்சி அமைக்கிறது. ஆட்சியியில் இருந்த இடதுசாரிகளின் LDF கூட்டணி 35 தொகுதிகளிலும், பாஜகவின் NDA 3 தொகுதிகளிலும் வெற்றி.
MAY 04, 2026 20:48 IST

நடிகர் ரஜினிகாந்த் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்து செய்தியில், "நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" என்றுள்ளார்.
MAY 04, 2026 20:21 IST

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் - முதல்வர் ஸ்டாலின் பதிவு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியதாவது, "மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்." என்றுள்ளார்.
MAY 04, 2026 19:26 IST

விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில் கூறியதாவது, "தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தவெக தலைவர் விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்" என்றுள்ளார்.
MAY 04, 2026 19:05 IST

பெற்றோரிடம் ஆசிபெற்ற விஜய்

தவெக தலைவர் விஜய் சென்னை அடையாறில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று நேரில் வாழ்த்து மற்றும் ஆசி பெற்றார். நீலாங்கரையில் இருந்து அடையறு சென்ற விஜய்க்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
MAY 04, 2026 18:33 IST

விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சிறப்பான வெற்றி பெற்றுள்ள விஜயின் தவெகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு எவ்விதக் குறைபாடும் இன்றி முழுமையாகச் செயல்படும் என பிரதமர் தனது வாழ்த்து பதிவில் தெரிவித்துள்ளார்.
MAY 04, 2026 18:25 IST

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் திமுக விஜய் தலைமையிலான தவெகவிடம் கடும் தோல்வியை கண்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவினார். இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய மு.க. ஸ்டாலின் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார்.
MAY 04, 2026 16:43 IST

எம்.எல்.ஏ ஆனார் விஜய்..!

சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. திருச்சி கிழக்கு தொகுதியிலும் வெற்றி முகம்..!
MAY 04, 2026 15:53 IST

பாஜக முதல் வெற்றி..!

உதகை தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. தவெக வேட்பாளர் 2ஆம் இடம்..
MAY 04, 2026 15:32 IST

கோபியில் செங்கோட்டையன் வெற்றி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் தவெக வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் தொடர்ச்சியாக 5வது முறையாக வெற்றி பெறும் செங்கோட்டையன், 10வது முறையாக எம்எல்ஏவாக சட்டமன்றம் நுழையவுள்ளார்.
MAY 04, 2026 15:32 IST

ஒரு கோடி வாக்குகளை கடந்த தவெக

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 1 கோடி வாக்குகளை தாண்டியது தமிழக வெற்றிக் கழகம்.. 71 லட்சம் வாக்குகள் பெற்று திமுக 2ஆம் இடம்.. 66 லட்சம் வாக்குகளுடன் அதிமுக 3ஆம் இடம்..
MAY 04, 2026 14:35 IST

விஜய் வீட்டிற்கு அதிகாரிகள் வருகை

தேர்தல் முடிவுகளின் படி தவெக 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சேபாஸ் கல்யாண், கார்த்திகேயன், விஜயகுமார் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். அதேபோல, தாம்பரம் ஆணையர் சஞ்சய் குமார் பனையூர் தவெக அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
MAY 04, 2026 14:24 IST

விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து

தவெக தலைவர் விஜய்க்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் நானி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
MAY 04, 2026 14:00 IST

விஜய் வீட்டிற்கு திரிஷா வருகை

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு நடிகை திரிஷா வருகை தந்துள்ளார். இன்று திரிஷாவுக்கு பிறந்தநாள் என்ற நிலையில், அவர் திருப்பதியில் காலை வழிபாடு செய்தார். அதைத் தொடர்ந்து தற்போது விஜய் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
MAY 04, 2026 13:58 IST

விஜய் வீட்டில் தீவிர ஆலோசனை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்த களம் கண்டுள்ள விஜயின் தவெக 105 இடங்களில் தவெக முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக நீடிக்கிறது. அதிமுக கூட்டணிக்கு 65 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 64 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து விஜய் தனது வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
MAY 04, 2026 13:48 IST

விஜய் தந்தை SAC பெரும் மகிழ்ச்சி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்றுள்ள நிலையில், அவரது தந்தை பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "தேர்தல் முடிவுகள் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தவெக 100% வெற்றி பெறும் என விஜய் நம்பினார். கூட்டணி இல்லாவிட்டாலும் தேர்தலை சந்திக்கும் தைரியம் விஜயிடம் இருந்தது. அவரை தலைவராக மக்கள் பார்க்கவில்லை. தங்களில் ஒருவராக பார்த்தனர்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
MAY 04, 2026 13:43 IST

தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் வெற்றி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநத் வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கீதா ஜீவனை வீழ்த்தி முதல்முறை களம் கண்ட தவெக வேட்பாளர் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
MAY 04, 2026 13:02 IST

முதல் வெற்றி காங்கிரஸ் வேட்பாளருக்கு

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியின் 19 சுற்று முடிவில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் முதல் வெற்றி அறிவிக்கப்பட்ட தொகுதி இதுவே.
MAY 04, 2026 12:31 IST

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

தவெக தலைவர் விஜய் வசிக்கும் சென்னை நீலாங்கரை இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பகல் 12.30 மணி நிலவரப்படி விஜயின் தவெக 105க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், விஜய் வீட்டை நோக்கி ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
MAY 04, 2026 12:05 IST

முதல் தேர்தலில் MGR-ஐ விஞ்சும் விஜய்

தற்போதைய நிலவரப்படி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது. இதேபோல, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த முன்னாள் முதலமைச்சரான எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி களம் கண்ட முதல் தேர்தலில் 30 சதவீதம் தான் பெற்று ஆட்சி அமைத்து முதல்வரானார். அதை ஒப்பிட்டு பார்த்தால் விஜய் தன் முதல் தேர்தலில் தனித்தே களம் கண்டு அந்த வாக்கு விகிதத்தை விஞ்சியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Tamil Personal Computer Info

[adnetwork code="PLC_3E3925AAF858"] ''), $atts); if (empty($atts['code'])) return ''; ob_start(); ?>