வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம் (9) இடம்பெற்றது.
இந்நிலையில் அங்கு பெண் அடியார்கள் தூக்குக் காவடி எடுத்து தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றியிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அத்தோடு பக்தர்கள் பாதயாத்திரை, பாற்செம்பு, பரவ காவடி, தீச்சட்டி பாதயாத்திரை என பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். வற்றாப்பளை அம்மன் பொங்கல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் பொலிசார், இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபட்டுள்ளனர்.






No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.