அஜித்தின் 60-வது படமான வலிமையை ஹெச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து முடித்துள்ளார்.
கொரோனாவால் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற முடியாத சூழ்நிலையில் ஒரு வழியாக இரண்டாம் அலைக்கு முன்னரும் அதன்பின்னரும் நடத்தி முடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது ‘வலிமை’ படப்பிடிப்புத் தளத்தில் அஜித்தின் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் ‘வலிமை’ படத்தின் 4-ஆம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடந்துவந்தது. அப்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகமே படப்பிடிப்பை நிறுத்தியது. அதோடு, வலிமை படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. ஆனால், அஜித் நேராக வீட்டுக்குச் செல்லவில்லை. குடும்பத்தின் மீதும், குழந்தைகளின் மீதும் பெரும் அக்கறைக் கொண்ட அஜித், ஆர்.ஏ.புரத்தில் உள்ள தன்னுடைய அப்பார்ட்மெண்டில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக 15 நாட்கள் தனியாக தங்கியிருந்துவிட்டு அதன் பின்னரே வீட்டுக்குச் சென்றுள்ளார். இதை அவருடைய செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தற்போது பகிர்ந்துள்ளார்.
அடுத்து, முதல் அலைக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது, கடந்த வருட அக்டோபரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கியது வலிமை டீம். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்தக் கட்ட படப்பிடிப்பை நவம்பர் மாதம் திட்டமிட்டது. அந்த இடைப்பட்ட நாட்களிலும் வீட்டுக்குச் செல்லவில்லை அஜித். நண்பர்களுடன் பைக் ட்ரிப் செல்ல திட்டமிட்டார். அஜித்தின் ஃபேவரைட் ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கில் வட இந்தியா முழுவதும் ஒரு நீண்ட பயணம் சென்றார். அந்தப் புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.பைக் பயணம் முடித்து அஜித் ஹைதராபாத் வரும் வரை படக்குழு காத்திருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு, மீண்டும் 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டே பிறகே வீட்டுக்கு சென்றுள்ளார் தல அஜித்! திரையரங்குகள் தமிழ்நாட்டில் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் இந்த வருடம் தீபாவளிக்கு நிச்சயம் வலிமை வெளியாகிவிடும் என்று உறுதியாக தல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Post a Comment
0 Comments