Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

ஆபாச படம் பார்த்த சிறுவனையும், குடும்பத்தையும் நாடு கடத்திய வட கொரிய அரசு!

வட கொரியா காவல்துறையினர் கணினியின் IP முகவரியைக் கண்டுபிடித்து, ஆபாச படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சிறுவனை கையும் களவுமாக பிடித்தனர்.

ஆபாச படத்தைப் பார்ப்பதால், சமூக சீரழிவு ஏற்படும் என கருதுகிறார், நாட்டின் பிரதமர் கிம் ஜாங் உன்.

ஆபாசப் படத்தைப் பார்த்தை அறிந்த கிம் ஜாங் உன், சிறுவனுக்கு மட்டுமல்ல, குடும்பம் முழுவதிற்கும் கடுமையான தண்டனையை வழங்கினார்.

இந்த சிறுவன் படித்த பள்ளி தலைமை ஆசிரியரும் தப்பிக்கவில்லை.


வட கொரியா அரசு நாடு முழுவதிலும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இங்கு ஆளும் தொழிலாளர் கட்சியும் பள்ளிகளில் ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இங்கே ஆபாச படங்களை தயாரிப்பதில் ஈடுபடும் நபர்கள், அல்லது அதை வாங்கி விற்பனை செய்வது  ஆகியவற்றுக்கு மரண தண்டனை தண்டனை கூட விதிக்கப்படுகிறது.



ஏனெனில் நாட்டின் பிரதமர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) ஆபாச படத்தைப் பார்ப்பதால், சமூக சீரழிவு ஏற்படும் என கருதுகிறார். இந்நிலையில், பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன் ஆபாசப் படத்தைப் பார்த்தை அறிந்த கிம் ஜாங் உன், சிறுவனுக்கு மட்டுமல்ல,  குடும்பம் முழுவதிற்கும் கடுமையான தண்டனையை வழங்கினார்.

ஒரு சிறுவன் தனது வீட்டில் ஒரு ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லை. ஆனால் வட கொரியா காவல்துறையினர் கணினியின் IP முகவரியைக் கண்டுபிடித்து, ஆபாச படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சிறுவனை கையும் களவுமாக பிடித்தனர்.

ஆபாச படத்தைப் பார்த்ததற்கான தண்டனையாக, சிறுவனையும் அவனது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேற்றி விட்டார். ஆனால், அந்த சிறுவன் அதிர்ஷ்டசாலி தான் ஏனென்றால் அவை தூக்கிலிடவில்லை. 

இந்த சிறுவன் படித்த பள்ளி தலைமை ஆசிரியரும் தப்பிக்கவில்லை. வட கொரியா விதிகளின்படி, பள்ளி குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரும் அதற்கு பொறுப்பேற்கிறார். இந்த வழக்கில், ஆசிரியர் தனது பொறுப்பை நிறைவேற்றுவதில்  தவறிவிட்டதாக கூறி, அவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இந்த வழக்கைல் தலைமை ஆசிரியருக்கு கடுமையான கூலி வேலை செய்யும் தண்டனை வழங்கப்பட்டது.

 

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big