தென்கொரியாவின் முதலிடத்திலுள்ள செல்வந்தரும் சம்சுங் நிறுவனத்தை தொழிநுட்ப உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்த்தெடுத்தவருமான லீ குன் ஹீ (Lee Kun-Hee) தனது 78ஆவது வயதில் நேற்றைய(25) தினம் காலமானார்.
அவருடைய சொத்துமதிப்பானது கடந்த மே மாத நிலவரப்படி சுமார் 375 பில்லியன் டொலர்கள் எனக் கூறப்படுகின்றது.
1987ஆம் ஆண்டு சிறிய தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட சம்சுங், லீயின் கடின முயற்சியால் அடுத்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை எட்டியது.
கைத் தொலைபேசிகளின் தயாரிப்பு துறையிலும் கால்பதித்த சம்சுங் நிறுவனம், நோக்கியா, அப்பிள், சொனி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி உலகளாவிய சந்தையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட லீ, வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று சியோல் நகரில் அவர் உயிரிழந்துள்ளதாக சம்சுங் குழுமம் தெரிவித்துள்ளது.
Post a Comment
0 Comments