Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

எமது பிள்ளைகளை காணாமல் ஆக்க செய்தவர்கள் அழிந்து நாடு கடத்தப்பட வேண்டும் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுதல்!!!

எமது பிள்ளைகளை காணாமல் ஆக்க செய்தவர்கள் அழிந்து நாடு கடத்தப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொண்டனர்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் நிறைவிலேயே இவ்வாறு வேண்டுதலில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய போராட்டம் 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆம்பமானது.

தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்க ஆரம்பித்துள்ளது.

இப்போராட்டத்தில் சமயத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன், சிங்கள மக்களும் கலந்து கொண்டனர்.
















Source: Ananthan Vanitha

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big