Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 1000 கிலோ சமையல் மஞ்சள்!

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் அடங்கிய 40 மூடைகளை நடுக்கடலில் வைத்து நாட்டுபடகுடன் மெரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மண்டபம் மெரைன் ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாம்பன் வடக்கு கடற்கரையில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாம்பன் லைட்ஹவுஸ் அருகே நடுக்கடலில் உரிய பதிவு எண் இல்லாத நாட்டு படகு ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது இதனை கண்ட மண்டபம் மெரைன் போலீசார் படகில் ஏறி சோதனை செய்தனர். அப்போது படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக மஞ்சள் படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்தது நாட்டு படகை பாம்பன் வடக்கு கடற்கரைக்கு எடுத்து வந்து மெரைன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நாட்டுபடகு தூத்துக்குடியை சேர்ந்தது எனவும் படகில் உள்ள ஆதார் அட்டை பாம்பன் சேதுபதி நகரை சேர்ந்தவர் உடையது எனவும் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

இந்தப் நாட்டுபடகு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு சமையல் மஞ்சள் கடத்தி செல்வதற்காக பாம்பன் வந்ததாகவும் இலங்கையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்தது வருவதால் வார இறுதி நாட்களில் தளர்வு இல்லா ஊரடங்கு அமலில் இருந்ததால் இலங்கை மீனவர்களை மீன் பிடிக்க கடலுக்குள் அனுமதிக்கவில்லை, இதனால் மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள் இலங்கை பகுதிக்கு செல்ல முடியாததால் சமையல் மஞ்சளை கடத்தி வந்த கடத்தல்காரர்கள் பாம்பனில் நாட்டுபடகை விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவீஸ்ச் பாம்பன் வடக்கு கடற்கரையில் கைப்பற்றப்பட்ட சமையல் மஞ்சளை பார்வையிட்டதுடன் அப்பகுதி மீனவர்களிடம் விசாரனை நடத்தி வருகிறார்.

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big