Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

ஈழம் மீது தனிப்பற்று கொண்ட மனிதர்! மனதாலும், வாழ்வியலாலும் ஒரு தமிழராக தன்னை தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர்!!!

 ஈழம் மீது தனிப்பற்று கொண்ட மனிதர்

கருப்பு ஜூலை - 1983 இனப்படுகொலைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளை போல கூட்டத்தோடு கூட்டமாக இல்லாமல், தன்னை போன்ற அன்றைய இளம் நடிகர்களுடன் இணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, படுகொலையை நிறுத்தவும், நீதி வேண்டியும் தமிழக ஆளுநரிடம் மனு அளித்தவர் விஜயகாந்த்.

இயக்குநர் மணிவண்ணன், ராதா ரவி போன்றவர்களுடன் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிய அன்றைய சினிமா கதாநாயகர் அவர் மட்டுமே.

1986 ஆம் ஆண்டு அதே காரணங்களுக்காக சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த். அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.


தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1990 ஆம் ஆண்டுகளில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவிபுரிந்தும் வந்தார். ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, ``ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது" என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டைத் தவிர்த்தார். (பின்னாள்களில் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன).


தனது 100-வது படத்துக்கு `கேப்டன் பிர*பா*கரன்’ எனவும், தனது மூத்த மகனுக்கு 'விஜய பிர*பா*கரன்' எனவும் பெயர்வைத்து தலைவர் மீதும், ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றைப் பறைசாற்றினார்.

அரசியலிலும் சரி தனிப்பட்ட வாழ்விலும் சரி தமிழ்நாட்டின் வரலாற்றில் தனி இடம் அவருக்கு உண்டு.

பிறப்பால், இனத்தால் திராவிடராக இருந்தாலும் மனதாலும், வாழ்வியலாலும்
ஒரு தமிழராக தன்னை தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர்.

அவரை வீழ்த்த ஊடக அறத்திற்கு புறம்பாக கீழ்த்தரமான செயலில் இறங்கி பெரும்பாடு பட்ட சன் டிவி போன்றவற்றின் ஊடக நேர்மையை காரி உமிழ்ந்த்து, கருணாநிதியின் 75 ஆண்டு கால அரசியலை நிர்மூலமாக்கியது, தமிழ்த்தேசிய தலைவர் மேதகு அவர்களை தன்னுடைய தலைவன் என அச்சமின்றி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே அறிவித்தது என துணிச்சல், கொள்கை உறுதி, அஞ்சாமை, அறம் போன்ற குணங்களுக்காக அவர் என்றும் போற்றப்படுவார்.

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big