நடிகர், அரசியல்வாதி, தேமுதிகவின் தலைவர், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு பரிணாமங்களில் மக்களை கவர்ந்தவர் விஜயகாந்த். உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்று(28) காலமானார்.
இதனால் விஜயகாந்தின் உடலை ஏற்றி செல்லும் வாகனம் மெது மெதுவாக மட்டுமே நகர்ந்தது. அதோடு சென்னை சாலையில் விஜயகாந்தின் உடலை எடுத்து சென்ற வாகனத்தை பார்த்த மக்கள் பெரிய பெரிய பைகளில் பூக்களை கொண்டு வந்து தூவி விஜயகாந்தை வழியனுப்பினர். விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் முழுவதும் அவர் மீதான பாசத்தை மக்கள் பூக்கள் தூவி வெளிக்காட்டினர்.
விஜயகாந்த் செய்த உதவிகளையும், அவர் நடித்த நடித்த பிரதான பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒன்று மாறி ஒன்றாக மக்கள் நினைவு கூர்ந்தனர். குறிப்பாக, பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் வரும், ’ ஏழைகள் வாழும் நீ செய்த யாகம்’, சின்னக் கவுண்டர் படத்தில் வரும், ’ அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே, அலை ஓசை படத்தில் வரும்’ ‘போராடடா ஒரு வாள் ஏந்தடா" போன்ற பாடல்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் பகிர்ந்து விஜயகாந்த் பற்றிய நினைவுகளை மீளுருவாக்கம் செய்தனர். மக்கள் அழுதனர், மற்றவர்களையும் அழவைத்தனர்.
இதனை பார்த்தவுடன் விஜயகாந்தின் 2 மகன்களும் கண்கலங்கினர். விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்ட வாகனத்தில் நின்று சென்ற அவர்கள் 2 பேரும் பொதுமக்களை பார்த்து கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு நன்றி செலுத்தினர். இறுதி ஊர்வலமான கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் முடிய உள்ளது. அதன்பிறகு இறுதி சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Post a Comment
0 Comments