Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

திரு விஜய்காந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவு!!! #Vijayakanth #விஜயகாந்த்

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த புரட்சி கலைஞருமான & தேமுதிக நிறுவனத் தலைவரான விஜயகாந்த் (வயது 71) சிகிச்சை பலனின்றி இன்று(28) காலமானார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் மரணத்தால் இரசிகர்கள், மக்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர்.
😢💐🌺🌹
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் காலமானார்!
(01)விஜயகாந்துக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இருமகன்கள் உள்ளனர். சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து வருகிறார்.

(02)1990-ம் ஆண்டு பிரேமலதாவை விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டார். பிரேமலதா தேமுதிகவின் பொதுச்செயலராக இருந்து வருகிறார்.

(03)விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
(04)2016 சட்டசபை தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு விஜயகாந்த் தோல்வி அடைந்தார். தேமுதிகவும் வீழ்ச்சியை எதிர்கொண்டது. 
(05)2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவ்ர் விஜயகாந்த்.

(06)2011 தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி அமைத்து திமுகவை அதிக இடங்களைப் பெற்றதால் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த.

(07)2011-ம் ஆண்டு தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வென்றார் விஜயகாந்த்.

(08)2006-ம் ஆண்டு விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை எம்.எல்.ஏ னார்.
  
(09)2005-ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கி அரசியலில் குதித்தவர் விஜயகாந்த்.

திரு விஜய்காந்த் அவர்கள் மறைவு!!! #Vijayakanth #விஜயகாந்த் #captainvijayakanth
ஆழ்ந்த இரங்கல்கள்
   
                       விஜயகாந்த் மறைவால் கதறி அழும் தேமுதிக தொண்டர்கள்

                                     விஜயகாந்த் வீடு முன்பு தொண்டர்கள் கதறல்

--------------------------------------------------------------




சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big