Type Here to Get Search Results !

#HappyNewYear2025

#HappyNewYear2025
#HappyNewYear2025 #HappyNewYear #2025

ssss

WeLComeToSOORIYAN
@Sooriyantv24

வலிமைப் படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு…பரபரப்பு

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் இன்று(24) தமிழ் நாட்டில் வெளியாகியுள்ள நிலையில், தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் இன்று(பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியானது.

இதனையொட்டி, நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும் கொண்டாடி வந்தனர். காலை 5 மணிக்கு முதல் காட்சி என்பதால், வலிமை திரைப்படம் ஓடும் திரையரங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில அதிகாலை 5 மணியளவில், தமிழ் நாட்டில் உள்ள கோவை மாநகரில் உள்ள காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கின் முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், திடீரென பெட்ரோல் குண்டை ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்

வாகன நிறுத்தும் இடம் அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேதமடைந்த வாகனத்தை ரசிகர்கள் உடனே அப்பறப்படுத்தியதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

பைக்கில் வந்த மர்ம நபர்கள் குறித்து, சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நன்றி: Tamil.The Indian Express

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big