வடக்கு கிழக்கில் தமிழரின் காணிகளை அபகரிப்பதற்கு எதிராகக் கொழும்பில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து போராட்டம்!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்
அவர்களுடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் சி.வி விக்னேஸ்வரனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பல விசேட சட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதியை சந்திப்பதற்கான கோரிக்கையினை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்திருந்தனர்.
எனினும், அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு முன்னதாகவே அவர்கள் நேரம் பெற்றிருக்கவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும், அதனை அவர்கள் நிராகரித்திருந்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தவிடயம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எமது செய்தி சேவைக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
Post a Comment
0 Comments