சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கியவர் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே.
ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளுக்கு கமெண்ட்டேட்டரி பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று(4) மாலை அவர் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52 மட்டுமே. ஷேன் வார்னே தனது தனிப்பட்ட பணிகளுக்காக தாய்லாந்தில் உள்ள கோசாமூய்(koh samui) என்ற இடத்திற்கு சென்றுள்ளார். இன்று மாலை அவர் தங்கியிருந்த விடுதியில் அவர் எந்தவித பேச்சு மூச்சும் இன்று கிடந்துள்ளார்.
உடனடியாக மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்து பார்த்த போது, அவரின் உயிர் பிரிந்தது தெரியவந்துள்ளது. திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், உதவிக்கு யாரும் இல்லாததால் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் ஏன் தாய்லாந்து சென்றார், எப்படி உயிரிழந்தார் என்பது மர்மமாகவே உள்ளது.
Post a Comment
0 Comments