Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

எந்தந்த இராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது? கவனம் தேவை!

கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!

Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
1/12
மேஷம்: சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
2/12
ரிஷபம்: சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
3/12
மிதுனம்: சந்திரன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பர்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
4/12
கடகம்: சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால்  மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
5/12
சிம்மம்: சந்திரன் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
6/12
கன்னி: சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சிலருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மன அமைதி ஏற்படும்.
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
துலாம்: சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினரால் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
7/12
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
8/12
விருச்சிகம்: சந்திரன் உங்கள ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் அம்மாவின் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி அடைய முடியும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
9/12
தனுசு: சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
10/12
மகரம்: சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சற்று காலதாமதமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
11/12
கும்பம்: சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும்.
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
12/12
மீனம்: சந்திரன் உங்கள் ராசியில் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும். 

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big