கற்றவன் பண்டிதனாவான்' என்ற உயர்ந்த சிந்தனையை அனைவருக்கும் விதைத்த மாமனிதர், அறிஞர், பரோபகாரி கே. எம். செல்லப்பா அவர்கள். இவர் தனது சிறு வயது முதல் புத்தகத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டு எப்பொழுதும் வாசிக்கும் பழக்கத்தினை உடையவர்.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்ற திருக்குறளின்படி வாழ்ந்தவர். தன் வீட்டில் பாரம்பரியமாக வைப்பில் உள்ள பல புத்தங்களை தன் நெருங்கிய நண்பர்களுடன் அவ்வப்போது வாசிக்கப் பகிர்ந்து வந்தார்.வாசிப்பவர்களின் அறிவு முதிர்ச்சியை கண்டும் அகமகிழ்ந்தார். 1933ம் ஆண்டு தனது வீட்டிலேயே ஒரு அறையை ஒதுக்கி அருகில் வசிக்கும் பலரையும் வாசிக்க அழைத்தார், பின்பு வாசிக்க தெரியாதவர்களுக்குத் தானே வாசித்துக் காட்டி அவர்களுக்கு ஆர்வமூட்டினார்.


'மதிப்புமிகு கே.எம்.செல்லப்பாவின் (24.02.2021) 125வது பிறந்தநாளில் அவரின் பொது சேவையை அகமகிழ்ந்து தமிழ் மக்கள் அனைவரும் நன்றியோடு நினைவுகொள்வோம், தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் கல்வி கற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கத் தியாகம் செய்த பரோபகாரி கே.எம்.செல்லப்பா அவர்களை வாழ்த்தி வணங்குவோம்'. என்று அன்னாரின் பேரன், பிரித்தானியா வாழ், விமலன் பாலசுப்ரமணியம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறார்.