முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
எனினும், நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
தற்போது இந்த நினைவிடம் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் முற்றம், பொங்குதமிழ் நினைவாலயம், மாவீரர் நினைவுச் சின்னம் உள்ள பகுதியில் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு, ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்தழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்தத் தகவல் அறிந்த பல்கலைக் கழக மாணவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பல்கலைக் கழக வாயிலுக்கு முன்பாகக் குழுமியுள்ளனர். அதனால் அங்கு பதற்றமான ஒரு நிலைமை காணப்படுகின்றது.
Post a Comment
0 Comments